Registrated with Indian Embassy & Masjid Kabeer


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

(MISK) மஜ்லிஸின் ஏற்பாட்டில்
மொழிப்பிரிவு (தமிழ் மற்றும் ஹிந்தி வகுப்புக்கள்) துவக்கம்
முதல்கட்ட தமிழ் மொழி வகுப்பு ஆரம்பம்

 

LANGUAGE TEACHING CLASSES IN TAMIL & HINDI

 

குவைத்தில் நிரவி வாழக்கூடிய பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பத்தினர்களின் அன்புச்சிறார்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்றிட வாய்ப்பற்ற நிலை இருப்பதை கருத்தில் கொண்டு மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ன் கண்ணியத்திற்குரிய தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி அவர்களின் சீரிய முயற்சியில் செம்மொழியாம் தனிப் பெரும் தமிழ் மொழியை கற்றிட களம் அமைத்திடும் முன்மொழிதலை மஜ்லிஸ் கடந்த சனிக்கிழமை நவம்பர் 27 ம் தேதி அன்று சோதனை ஓட்டமாக செயல்படுத்தியது.

மறுசீரமைக்கப்பட்ட மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ன் பல்வேறு மார்க்க நலப்பணிகளுடன் முதல்கட்டமாக சிறுவர் சிறுமியர்களுக்கான பிரத்தியேக பாடத்திட்டத்துடன் கூடிய தமிழ் மொழி வகுப்புக்கள் ஹவல்லி பகுதியில் மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி அஜ்வத் ரைவின்தி ஹஜ்ரத் அவர்களின் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20 மாணவ மாணவியர்கள் இச்சிறப்பு முதல் வகுப்பில் பங்கு பெற்று பயன் அடைந்தனர். (மேற்படி தமிழ் வகுப்பு தற்போது அவ்விடத்திலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10:30 மணிமுதல் நடைபெறும்) தமிழை தாய் மொழியாக பேசக்கூடிய புலம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் தொகுப்பாக வாழும் இந்நாட்டில் தனியார் பள்ளிகளில் ஆங்கில மொழிவழி கல்வித்திட்டத்தில் பயிலும் சிறார்கள் தமிழ் மொழி நீங்கலாக மற்ற பாடங்களை நன்றாக கற்று தேர்ந்து வரும் வேளையில், தமிழ் மொழி தெரியாத அவல நிலையை போக்கும் முகமாகவும் தாய்நாட்டிற்காற்றும் தனிப்பெறும் தொண்டாக கருதியும் இம்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மஜ்லிஸின் மொழிப்பிரிவில் முதன்மை பயிற்சி மொழியாக பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வரும் காலத்தில் இப்பயிற்சி மையங்கள் மேலும் விரிவு படுத்தப்பட்டு குவைத்தின் எல்லா பகுதி மக்களும் பயன்பெறும் விதத்தில் சேவையாற்றப்படும்.

அதே போல், தனியார் பள்ளிகளில் மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தேவைப்படும் ஹிந்தி மொழி வகுப்புக்களும் விரைவில் ஆரம்பம் செய்யப்படவிருக்கிறது. இப்பயிற்சி மொழி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Majlis Ihyau Sunna Kuwait (MISK) has initiated yet another remarkable service to the Tamil commune living in Kuwait. It has been one of the prime aims of our honorable president Moulavi Abdul Latif Qasimi, to organize for such home based teaching centers to teach Tamil & Hindi languages to our younger generations. Our children who study in Kuwait generally tend to miss the opportunity to learn our mother tongue due to various reasons and hence it becomes our obligation to organize for such classes for them with the time suitable to the children, preferably during week holidays or in the evening times.

By the Grace of Allah the Almighty, the 1st of its classes for both boys and girls was started on 27th Nov 2010 Saturday in Hawally at the residence of our Majlis’s Vice President, Moulavi MTM Ajwad Raivindi. The Tamil language class is conducted on every Saturday morning from 10:30 till 12:30. So far 20 students (Indians & Sri Lankans) have joined in our class and Insha Allah more similar classes will be arranged in other areas of Kuwait too. Likewise, such special classes for teaching Hindi is also on the anvil.

 

For enrollment and more info please contact:

தொடர்பு எண்கள்:

55130271 / 97243382

MISK on FACEBOOK