Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸூன்னா குவைத் (MISK) ஏற்பாட்டில்      கல்விவள மேம்பாட்டு விளக்கக்கூட்டம்
பேராசிரியர் K.M. காதர் மொய்தீன்  மற்றும்
காயல் தளபதி  K.A.M. முஹம்மது அபூபக்கர் பங்கேற்பு!!
  

குவைத் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகமான அவ்காப் மற்றும் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவில் மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (MISK) சிறப்பான ஒரு கல்விவள மேம்பாட்டுக் கருத்தரங்கத்தை குவைத் சர்க் பகுதியில் அமைந்துள்ள் அபூஹூரைரா (ரலி) மஸ்ஜிதில் கடந்த 04.01.2013 வெள்ளியன்று ஏற்பாடு செய்திருந்தது.

காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சமுதாய விழிப்புணர்வு மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக குவைத்திற்கு வருகை புரிந்த 4 சிறப்பு விருந்தினர்களில் கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத்தலைவருமான பேராசிரியர் K.M. காதர் மொய்தீன் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் காயல் தளபதி. K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். சமுதாய சீர்கேடுகளில் ஒன்றான வேற்றுமையை நீக்கி ஒற்றுமையை காக்கும் சன்மார்க்க நீதி என்ற தலைப்பில் காயல் தளபதி. K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்களும், உம்மத்தின் உயர்வே உன்னத உயர் கல்வி என்ற தலைப்பில் பேராசிரியர் K.M.. காதர் மொய்தீன் அவர்களும் சமுதாய நல்வாழ்வுக்கான சன்மார்க்க சீருரைகளை நிகழ்த்தினார்கள். மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (MISK) வாராந்திர குத்பா மொழிபெயர்ப்பு மற்றும் சிறப்பு வகுப்புகள் நடக்கும் ஜாமிஆ பள்ளியான மஸ்ஜித் அபூஹூரைரா (ரலி) அவர்களின் பெயரில் அமையப்பெற்ற இந்தப் பள்ளியில் நடைபெறும் இச் சிறப்புக்கருத்தரங்கத்தையும் ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) என்ற வரலாற்றுப்புகழ் பெற்ற நடமாடும் ஹதீஸ் பல்கலையாக விளங்கிய அந்த அண்ணலாரின் ஒப்பற்ற நெருங்கிய சஹாபியின் மார்க்கத்தேடல் மற்றும் ஹதீஸ் அறிவித்தல்களையும் ஒப்பிட்டுப் பேசிய பேராசிரியர் அவர்கள் கல்வியின் அவசியம் குறித்தும் மார்க்க அறிஞர்களின் சிறப்புக்களையும் சிலாகித்து உரையாற்றினார்கள். ஆலிமின் மரணம் ஆலத்தின் மரணம் போன்ற கருத்துக்களுடன் உரைநிகழ்த்திய பேராசிரியர் அவர்கள் ஆதமின் பிள்ளைகளான மனித குலத்திற்குத்தான் படைப்புக்களின் பெயர்களை வல்ல இறைவன் அறிய வைத்தான். தான் கண்டுபிடித்து அறியும் இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் பெயர் வைக்கும் பேரரறிவு மனித குலத்தின் தனிச்சிறப்புகள். இன்னத்தீன இன்தல்லாஹில் இஸ்லாம் என அல்லாஹ் (ஜல்) கூறும் அவன் ஏற்றுக்கொண்ட இயற்கை மார்க்கமான இஸ்லாம் இயம்பும் கல்வி அதன் மேம்பாட்டுக்கான முயற்சி, விழிப்புணர்வு போன்றவையால் இம்மையிலும் மறுமையிலும் நம் சமுதாயம் பெரும் உயர்வுகளை எட்டும் என்ற கருத்துக்களோடு நிகழ்த்தப்பட்ட சீருரைகளை கேட்க நூற்றுக்கணக்கானவர்கள் ஜூம்மா தொழுகைக்குப்பிறகு பங்குபெற்று பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் - இந்திய தூதரகம், இஸ்லாமிய விவகாரத்துறையான அவ்காபின் அங்கீகாரத்துடனும், ஆதரவோடும் செயல்பட்டு வரும் இம்மஜ்லிஸ் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் அகில இந்திய இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பான (Federation of Indian Muslim Associations) FIMA வின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் அந்தஸ்துடனும் அனைத்து சக அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் நன்மதிப்பையும் பெற்று வல்ல இறைவனின் உதவியோடு பற்பல சேவைகளைப்புரிந்து வரும் இவ்வமைப்பையும் இவ்வமைப்பின் தலைவர் ஹஜ்ரத் அப்துல்லத்தீப் காஸிமி மற்றும் நிர்வாகிகளையும் சிறப்பு விருந்தினர்கள் மனதாரப்பாராட்டியதோடு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். உரை நிகழ்த்திய சிறப்பு விருந்தினர்களுக்கு மஜ்லிஸின் நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


காயிதே மில்லத் பேரவை தலைவர் ஜனாப் முஹம்மது பந்தூர் பாரூக் மற்றும் பேரவையின் மூத்த உறுப்பினரும், மஜ்லிஸின் துணைத்தலைவர்களில் ஒருவருமான டாக்டர் அன்வர்பாசா ஆகியோர் முன்னிலை வகிக்க பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் எண்ணற்ற சகோதர சகோதரிகள் கலந்து சிறப்பித்தார்கள். 

MISK on FACEBOOK