Registrated with Indian Embassy & Masjid Kabeer

Welcoming Ramadhan & Virtues of Sha'ban - 2011


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த
ரமழான் வரவேற்பு மற்றும் ஷஃபான் மாத சிறப்பு சொற்பொழிவுகள்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) புனித ரமழான் வரவேற்பு மற்றும் ஷஃபான் மாத சிறப்பு சொற்பொழிவுகள் கடந்த 15.07.2011 வெள்ளியன்று நடைபெற்றுது. ஃபஹாஹீல் பகுதியில் பிலாத் அல் ஷூஹதா தெருவில் அமைந்துள்ள அப்துல்லா அஜீல் (அல் மஹ்ரி நடுநிலைப்பள்ளி எதிரில்) மஸ்ஜிதில் இந்நிகழ்வுகள் மஃரிபு தொழுகை முதல் இரவு 10:30 மணிவரை இருபகுதிகளாக நடைபெற்றது.

முன்னதாக மக்ரிபிற்குப்பிறகு மஜ்லிஸ் சார்பாக மூன்று யாஸீன்கள் ஓதப்பட்டு துவா செய்யப்பட்டது அதைத்தொடர்ந்து மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லவி M.T.M. அஜ்வத் ரைவின்தி அவர்கள் முன்னதாக வந்து சிறப்பித்த ஒரு சிலருக்காக சிறப்பான விளக்க பயான் செய்தார்கள்.

இஷா தொழுகைக்குப்பிறகு முக்கிய நிகழ்வுகள் ஆரம்பம் ஆனது. மஜ்லிஸின் இணைச்செயலாளரும் ஃபஹாஹீல் பகுதி ஒருங்கிணைப்பாளருமான மவ்லானா மவ்லவி சேக் தாவூது சிராஜி அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள். ரமழான் மற்றும் ஷஃபானுடைய பெறும் சிறப்புகள் அம்மாதங்களில் பேண வேண்டிய ஒழுங்குகள் செய்ய வேண்டிய அமல்களை விளக்கிக் கூறினார்கள். கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின் தலைவர் T.P. அப்துல் லத்தீப் காஸிமி அவர்கள் இறுதியில் நிறைவுப் பேருரையாற்றினார்கள். அடியார்களின் அடிப்படைப் பண்புகள், அமானத் மற்றும் நம்பகத்தன்மை குறித்து வெகுவாக விளக்கிக் கூறினார்கள். சொல்லப்படும் சொல்லிலும், கொடுப்படும் வாக்கிலும், தன்பால் பெறப்படும் ஒவ்வொரு விஷயங்களிலும் பேணவேண்டிய அமானத்துக்கள் குறித்து வலியுறுத்திப் பேசினார்கள். தொழுகைகளை நியமமாக தொழும் அதே வேளையில் ஜக்காத் கொடுக்கும் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என்பதை முக்கியத்துவம் குறித்து கூறினார்கள். எத்தனையோ பேர்கள் சரீர முயற்சிகளின் வழிபாடுகளை கவனத்துடன் நிறைவேற்றும் நிலையில் பொருளாதார நிலைப்பாட்டில் அதற்கான கடமைகள் ஏற்படும் போது ஜக்காத் வழங்கிட தயங்குவது பேராபத்தில் சிக்க வைத்திடும் என்பதை ஆணித்தரமாக மூஸா (அலை) காலத்தில் வாழ்ந்த காரூனுடைய நிலைகளை உதாரணத்துடன் விளக்கினார்கள். ஜக்காத்துடைய நிஸ்பத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் உரைநிகழ்த்தினார்கள். அத்தோடு வந்திருந்த அனைவரிடமும் எழுந்த சந்தேகங்களுக்கு அழகிய முறையில் விளக்கமளித்து துவா செய்தார்கள். மஜ்லிஸின் இணைச்செயலாளரும், மஸ்ஜித் அஜீலின் மஜ்லிஸின் வாரந்திர வகுப்புக்களின் பொறுப்பாளருமான மவ்வலி முஹம்மது அலி ரஷாதி அவர்கள் மஜ்லிஸின் பல்வேறு முயற்சிகளையும் நிகழ்ச்சிகளையும் விளக்கிக் கூறினார்கள். அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் அடிப்படையில் நடைபெறும் அனைத்து முயற்சிகளுக்கும் பேராதரவு நல்கிட ஃபஹாஹீல் வாசிகளை அன்போடு கேட்டுக் கொண்டார். இறுதியில் ஜனாப் முனீர் அஹமது நன்றி நவிழும் போது எப்படிப்பட்ட முயற்சிகள் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கேட்டறிந்ததோடு, இப்பகுதி மக்களின் வசதிப்படி மஜ்லிஸின் முயற்சிகள் தொடரும் என கூறினார். பெண்கள் மற்றும் சிறார்களோடு கலந்து சிறப்பித்த இந்நிகழ்ச்சி இரவு 10:30 மணியளவில் நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

 

MISK hosted special lectures for Welcoming Ramadhan &Virtues of Sha'ban
 
MISK – Majlis Ihya'u Sunna Kuwait hosted a special lectures for the occasion of the blessed months,  "Welcome Ramadhan and Virtues of Sha'ban" the special program held on 15th July 2011 at Masjid Abdullah Ajeel. (Block# 8, Blath Al-Shuhadha Street) at Fahaheel Area.  

The program started after Maghrib prayer with Quran Recitation (Chapter Yaseen 3 times) and special lecture delivered by Vice President – MISK,  Moulavi M.T.M. Ajwad Raiwindi till Isha Prayer. The Main Program started after Isha Prayer directly.. MISK Joint Secretary and Coordinator In charge for Fahahell Area Moulavi Hafiz Sheikh Dawood Siraji delivered a wonderful sermon about Sha'ban and Ramadhan. He expressed to prepare well to welcoming Ramadhan with good spirit and health.  MISK President Moulavi T.P. Abdullatif Kasimi delivered the principal theme of his Keynote address, which he mentioned the basic qualities and etiquettes to keep and practice this month.

This month is a training period to keep the great calibers in our existing life. Trustworthy is mandatory for every Muslims. Prayer is first obligatory and no exceptions at all as well the Charity is adjacent obligation with prayer, whenever the Quran mentions the prayer which mentions along with Zakat, many people are so ignorant to give zakat., that they are ready to offer a physical devotion but they hesitating on financial devotion. Hazrath Kasimi remembered the punishment story of an arrogant rich Karun who was denying the charity during the period of Prophet Moses (p.b.u.h).  (The story of Karun clearly illustrates for us that Allah does not bestow his mercy on those who are arrogant because of their wealth and possessions, and who consider themselves to be wiser or more knowledgeable than others. In the Qur'an, Allah also gives us examples from other peoples of the past. Many civilizations of the past had attained great success and material wealth. Yet, all these civilizations were obliterated from the face of the earth.

Allah took back the souls of these people, who had thought themselves to be the rulers of the earth, and reduced their glorious palaces to ruins: How many wrongdoing cities We destroyed, and now all their roofs and walls are fallen in; how many abandoned wells and stuccoed palaces! (Surat al-Hajj: 45)There is another lesson the story of Karun teaches us: not to be taken by the allure of the temporary riches of this world and of those who possess them. The ones a believer should be inclined to are hose who withstand hardships in the way of Allah, those who spend their possessions, and live for the cause of Allah, and those men of faith and wisdom, whose hearts are full of love for Allah.

As the Prophet Muhammad (May Allah bless him and grant him peace) said "Allah does not look at your forms and possessions, but He looks at your hearts and your deeds." (Muslim) Those who appear to lead a luxuriant and prosperous life, actually live in spiritual deprivation. Each day drift these people into eternal torment in Hell. Allah indicates this situation as follows: Do not let their wealth and children impress you. God merely wants to punish them by them during their life in the world and for them to expire while they are unbelievers. (Qur'an, 9: 55),Possessions should not be desired for pleasure and ostentation only. We need to keep in mind that Allah puts humans to test by their possessions as well. These possessions bring enjoyment to people as long as they are used to earn the good pleasure of Allah. Karun, for instance, ended up in misery, despite his measureless wealth. The case of Karun is indeed a warning for all generations, both past and present).

Moulavi Mohamed Ali Rashadi described the MISK current activities. Janab Muneer Ahmed thanked to everyone for the this excellent program. The program ended with Supplication. Dinner Packs delivered to everyone.

 

MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
   
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011

MISK on FACEBOOK