Registrated with Indian Embassy & Masjid Kabeer

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த

MISK HOSTED ISLAMIC NEW YEAR PROGRAM (HIJRI 1433), MUHARRAM & ASHOORA

இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்ச்சிகள் (முஹர்ரம் & ஆஷூரா)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...

MISK – Majlis Ihya'u Sunna Kuwait in cooperation with Ministry of Awqaf & Islamic Affairs and Grand Mosque Administration organized a spectacular program for the special lectures on the eve of New Hijra Year 1433 which was held on 2nd December 2011 at Grand Mosque Auditorium at 7:15 p.m.

Esteemed Moulavi T.P. Abdul Latif Kasimi (The Founder President – MISK) presided over the function. Master Irfan Ziavudeen recited the holy verses on beginning, while Moulavi Mohammed Sheriff Manbaee (Ulema Wing - MISK) welcomed everyone during his welcome address. Janab Abdul Bari Hazrath (Vice President – MISK) delivered an opening speech. The Special Guest Janab Eng. Mukhtar Marouf, Patron & Ex. President of Federation of Indian Muslim Associations (FIMA) delivered a wonderful address about Migration of Prophet and an Ideal Islamic governance system formed after migration in Medina by the great leadership of Prophet (PBUH) and he referred many important topics prior to his Hijra address which are desperately needed to our community, that he insisted foremost 

1) the UNITY which is highly needed within our community nowadays, many of our Islamic brothers are working as a sects and parties but our strength will be substantial and blessed only by keeping the unity. we should have a best example from our daily five times congregational prayers, that been understood by his speech that When praying, Muslims stand shoulder to shoulder behind one Imam asking Allah and supplicating to Him; this shows their strength and unity. Praying in jama^ah also mends the hearts of the believers, enhances their solidarity, and shows their sympathy, humbleness, and compassion towards each other. Praying in congregation strengthens the ties of brotherhood between the elderly and the young, the poor and the rich, and the strong and the weak. They all stand side by side in one straight line highlighting the fairness of Islam. Their ranks vary according to their piety and submission to their Lord and Creator, the One who does not need any of His creation whereas everyone is in need of Him. We say to those who neglect praying in jama^ah and not realizing the importance of it: by the Lord of the kabah you have lost a great deal of reward and countless merits.

2) The DOWRY in our community , Janab Mukhtar Marouf mentioned secondly the evil of dowry, rampantly prevailing in Indian society, A Muslim father does not have to bother for dowry, as there is nothing called 'Dowry' in Islam. On the contrary, Islam enjoins the groom to give a 'Bridal-Gift' or 'Dower' as a token of love and assurance to his would be wife at the time of marriage. In fact without payment of this sum, the marriage cannot get solemnized. The practice of dowry among ignorant Muslims is a result of the influence of the evil practices of the society they live in. Islam does not put any financial burden on the father of the girl. The address was made a high impact of audience where he encouraged the parents to try our self to not keep this evil practice in our own children, our self reformation will be the cause of our communal revolution. Janab Mukhatar expressed his happiness and greetings to all the MISK members for the induction of MISK with Federation of Indian Muslim Associations (FIMA) a large union of 15 various associations, he informed that FIMA fully satisfied the MISK activities and approved as a full member in FIMA. He released the New Year Hijri Calendar of MISK which was printed and donated by MISK Advising committee Chairman and President of AZP and CVP Muslim Jamath Sabai President Janab Haji Lucky Sulaiman Batcha, which has been received by five prominent personalities and distributed to public. 

Moulavi T.P Abdullatif Kasimi (The Founder President, MISK) and Moulavi M.T.M. Ajwad Raiwindi (Vice President, MISK) were delivered the exceptional discourses about Lessons of HIJRA, Thoughts of Islamic New year and whole history of that event. The Special Prizes and Certificates been awarded to the Hijra 1433 -Quiz winners (1st, 2nd and 3rd plus three consolation prizes) The event concluded at 9: 45 p.m with Dua by Moulavi Moulavi Mohammed Ali Rashadi (Dy Secretary, MISK), the vote of thanks given by Dr. Shafiullah (Vice President – MISK). The whole program convened by M.Muneer Ahmed (Dy.General Secretary, MISK). About 200 men and women including many prominent personalities in Kuwait were benefitted by attending this wonderful program. Alhamdulillah!!

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) இஸ்லாமிய ஹிஜ்ரி (1433) புத்தாண்டை முன்னிட்டு கடந்த 02.12.2011 வெள்ளியன்று முஹர்ரம் மற்றும் ஆஷூரா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தியது. குவைத் நாட்டின் பெருமைக்குரிய தேசிய பள்ளியான மஸ்ஜித் கபீர் (பெரிய பள்ளி) சிறப்பு அரங்கத்தில் இந்நிகழ்வுகள் மாலை 7:15 முதல் இரவு 09:45 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின்;தலைவர் மவ்லானா அப்துல் லத்தீப் காஸிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை இளவல் இர்பான் ஜியாவுதீன் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார். மஜ்லிஸின் உலமா குழு உறுப்பினர் மவ்லானா மவ்லவி மு ஹம்மது ஷரீப் ஹஜ்ரத் மன்பயி அவர்கள் வரவேற்புரை நல்கினார். அதைத் தொடர்ந்து மஜ்லிஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஜனாப் அப்துல் பாரி ஹஜ்ரத் அவர்கள் நிகழ்ச்சியின் மிகப்பொருத்தமான ஒரு துவக்கவுரையாற்றினார்கள்.ஜனாப் முனீர் அஹமது அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளரான இந்திய இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பின் (குஐஆயு) ஸ்தாபகர்களில் ஒருவரும் மற்றும் முன்னாள் தலைவருமான மரியாதைக்குரிய ஜனாப் முக்தார் மாரூப் அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அண்ணலாரின் ஹிஜ்ரத் குறித்து ஆங்கிலத்தில் விளக்கவுரை நிகழ்த்தியதோடு முன்னதாக சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை பண்புகளில் மிக முக்கியமான சில விஷயங்கள் குறித்து தெளிவுரை நிகழ்த்தினார்கள் அவற்றில் இன்றைய காலகட்டத்தில் அல்லாஹ்வும் ரசூலும் வலியுறுத்தும் ஒற்றுமை குறித்து முதன் முதலாக முக்கியத்துவத்துடன் பேசினார்கள். நம் ஐங்காலம் இமாம் ஜமாத்துடன் தொழுகையை பேணுதலாக நிறைவேற்றும் போது தோளோடு தோள் நின்றும் முன்வரிசையில் இடம் இருப்பின் பின்; உள்ளவர் முன்சென்று அதை பரிபூரணப்படுத்தி படைத்த இறைவனுக்கு செலுத்தும் வணக்கத்திலே எவ்வித வேறுபாடுகளையும் காட்டாமல் நம்பிக்கையாளர்களான நாம் ஒற்றுமையை வெளிப்படுத்துவதில் பல்வேறு படிப்பினைகள் நம் வாழ்வில் பெற வேண்டியுள்ளது என்பதாக குறிப்பிட்ட ஜனாப் மாரூப் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தினூடே புறையோடிக்கிடக்கும் தீய பழக்கமான வரதட்சணைக் கொடுமையினை முற்றாக களைய வேண்டியதின் அவசியத்தை கூறி அதற்காக ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும்... பெண்ணைப்பெற்றவர் தட்சினை கொடுக்க மாட்டேன் என உறுதியெடுப்பதும், ஆணைப் பெற்றவர் தட்சினை வாங்க மாட்டேன் என உறுதியெடுக்கும் தனி மனித மாற்றங்களும் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படும் மறுமலர்ச்சிகளும் தான் சமுதாயத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு வித்திடும் என உரத்த சிந்தனைகளை வழங்கினார்கள். அத்தோடு மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் அமைப்பின் இஸ்லாமிய நற்சேவை பயணத்தில் ஒரு சிறப்பு அம்சமாக இன்று இவ்வமைப்பு இந்திய இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பின் திருப்திமிக்க ஒரு அழகிய அங்கமாக பரிணமிக்கிறது. இவ்வமைப்பு முழு உறுப்பினருக்கான அந்தஸ்துடன் இந்திய இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பின் வரிசையில் இடம் பெற்றுள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என் வாழ்த்துக்கள் கூறி அமர்ந்தார்.

மஜ்லிஸின் கண்ணியத்திற்குரிய தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி அவர்களும், கண்ணியத்திற்குரிய துணைத்தலைவர் மவ்லவி அஜ்வத் ரைவின்தி அவர்களும் ஹிஜ்ரா மற்றும் ஆஷூரா தினத்தின் சிறப்புக்களை மிக அற்புதமாக ஆழ்ந்த ஞானம் நிறைந்த சிறப்புரைகளை மக்களுக்கு வழங்கினார்கள். மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத்தின் ஆலோசனைக்குழுத் தலைவரும் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாத் சபையின் மரியாதைக்குரிய தலைவருமான புரவலர் ஜனாப் ஹாஜி லக்கி சுலைமான் பாட்சா அவர்களால் அழகிய முறையில் மஜ்லிஸிற்காக இலவசமாக அச்சிட்டு வழங்கிய புதுவருடத்திற்கான நாள்காட்டி (ஊயடநனெயச) இன்று அதிகாரப்பூர்வமாக சிறப்பு விருந்தினர் ஜனாப் முக்தார் மாரூப் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் ஐந்து பிரதிகள் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டதன் பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (ஆஐளுமு) இஸ்லாமிய ஹிஜ்ரி (1433) புத்தாண்டின் சிறப்பு குவிஸ் போட்டிகளில் கலந்து விடையெழுதிய நூற்றுக்கணக்கானவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு நல்ல முறையில் விடையளித்த ஏழு நபர்கள் தெரிவு செய்யப்பட்டு குழுக்கல் முறையில் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகளும் அளிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத்தின் தகுதிச் சான்றுகளும் வழங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் நிரம்பி வழிந்த அரங்கத்தில் அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் டாக்டர் ஷபியுல்லாஹ்வின் நன்றியுரைக்கு பிறகு துணைச் செயலாளர் மவ்லானா மு ஹம்மது அலி ரஷாதி அவர்களின் துவாவுடன் குறித்து நேரத்தில் துவக்கப்பட்ட நிகழ்வு சரியாக இரவு 9:45 மணிக்கு நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.!!


MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK_Seera_2011
MISK on FACEBOOK