Registrated with Indian Embassy & Masjid Kabeer


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த
இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்ச்சிகள் (முஹர்ரம் & ஆஷூரா) 

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) இஸ்லாமிய ஹிஜ்ரி (1432) புத்தாண்டை முன்னிட்டு கடந்த 09.12.2010 வியாழனன்று முஹர்ரம் மற்றும் ஆஷூரா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தியது. ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஜம்யிய்யத்துல் இஸ்லாஹ் அரங்கத்தில் இந்நிகழ்வுகள் மாலை 5:00 முதல் இரவு 11:00 மணிவரை இருபகுதிகளாக நடைபெற்றது.

முன்னதாக இரு பிரிவுகளாக குழந்தைகளுக்கான குர்ஆன் மனனப்போட்டிகள் (10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 10-12 வயதிற்குட்பட்டவர்கள்) மாலை 5:00 முதல்7:00 நடைபெற்றது. இப்போட்டிகளில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும், இந்தியா இலங்கை நாட்டை சேர்ந்த சுமார் 85 சிறுவர் சிறுமிகள் வரை ஆர்வமுடன் பங்கெடுத்தனர். மஜ்லிஸால் நியமிக்கப்பட்ட முறையான கண்காணிப்பு மற்றும் தேர்வுக்குழுவினரால் பதிவுகள் செய்யப்பட்டு போட்டிக்கான அனுமதி பாஸ்களுடன் (Competitor Pass) போட்டிகள் நடத்தப்பட்டது. அதே போல் பெரியவர்களுக்கான வினாடி வினா போட்டிகளும் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 200 நபர்கள் வரை கலந்து கொண்ட வினாடி வினாவுக்கான விடை எழுதும் போட்டியில் பங்குபெற்றோர் தத்தமது விடைத்தாள்களை முறையாக பூர்த்தி செய்தி தேர்வுக்குழுவினர்களிடம் குறித்த நேரத்தில் ஒப்படைத்தனர்.

தேனீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறலுடன் மாலை 7:30 மணிக்கு முக்கிய நிகழ்வுகள் ஆரம்பம் ஆனது. கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின்;தலைவர் மவ்லானா அப்துல் லத்தீப் காஸிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை மஜ்லிஸின் பொருளாளர் ஜனாப் கபீர் அலி அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார். மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி நாஸர் சாதிக் ரப்பானி ஹஜ்ரத் B.A., வரவேற்புரை நல்கினார். சிறப்பு அழைப்பாளரான கேரள முஸ்லிம் லீக் பிரமுகரும் KKMCC கண்ணனுர் மாவட்டத் தலைவருமான் டாக்டர் காலிப் அல் மஷுர் ஆங்கிலத்தில் முக்கிய துவக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் பேரா. முனைவர் இப்ராஹீம் அல் ஸயீத் (பேராசிரியர் - குவைத் பல்கலைக்கழகம் மற்றும் முன்னாள் குவைத்தின் கலாச்சாரத் தூதுவர், லண்டன்) மகத்துவமிக்க நபிகளாரின் ஹிஜ்ரத் பயணத்தைப் பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட இஸ்லாமிய பெரும் புரட்சியைப் பற்றியும் தெளிவாக அரபி மொழியிலே சொற்பொழிவாற்றினார். மஜ்லிஸின் இணைச்செயலாளர் மவ்லவி முஹம்மது அலி ரஷாதி அவர்கள் சிறப்பு விருந்தினருடைய அரபிமொழி சிறப்புரையை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களுக்கு மஜ்லிஸின் சார்பாக மஜ்லிஸின் ஆதரவாளரும் ஆலோசகரும், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத் சபை தலைவருமான ஜனாப் லக்கி சுலைமான் பாட்சா அவர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொதுச் செயலாளர் ஆவூர் பஷீர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மஜ்லிஸின் தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களும் துணைத்தலைவர் மவ்லவி அஜ்வத் ரைவின்தி ஹஜ்ரத் அவர்களும் முஹர்ரம், ஆஷூரா, ஹிஜ்ராவின் படிப்பினைகள் மற்றும் புதுவருட சிந்தனைகள் போன்ற பொருள்களுடனும் சிறப்புரைகளை நிகழ்த்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மஜ்லிஸின் ஆதாரவாளர்களான முக்கியப் சமுதாயப் பிரமுகர்களின் கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக சிறுவர்களிடையே குர்ஆன் மனன ஆர்வத்தை உண்டாக்குவதற்காக குர்ஆன் மனன போட்டியில் வென்றவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளுடன் மஜ்லிஸின் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் மவ்லவி அஜ்வத் ரைவின்தி ஹஜ்ரத் அவர்களின் துவாவிற்குப் பிறகு மவ்லவி முஹம்மது இஸ்மாயில் முஹ்ஸின் சிராஜி அவர்கள் நன்றி நவின்றதோடு விழா சிறப்பாக முடிவடைந்தது. ஏறக்குறைய 400 மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இவ்விழாவில் பங்கு பெற்று பயனடைந்தனர். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவுகள் ஏற்பாட்டுடன் பெண்களுக்கு சிறப்பான தனி வசதி செய்யப்பட்டிருந்தது.

MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK
MISK on FACEBOOK