Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாட்டில்
ஹாஜிகளுக்கான வழியனுப்பு மற்றும் ஹஜ் வழிகாட்டு நிகழ்ச்சி
(محاضرة توجيهية لحجاج بيت الله الحرام )

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) அல்அமீன் உம்ரா சர்வீஸ் ஆதரவில் ஏற்பாடு செய்த ஹாஜிகளுக்கான வழியனுப்பு மற்றும் ஹஜ்ஜின் நடைமுறை விளக்க வழிகாட்டுதல் கூட்டம் கடந்த புதன்கிழமை 03.11.2010 அன்று குவைத் சிட்டியில் உள்ள நியூ தர்பார் (தஞ்சை உணவகம்) ஹோட்டலில் மாலை 7:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை சிறப்பாக நடந்தேறியது.

கண்ணியத்திற்குரிய மவ்லானா அப்துல் லத்தீப் காஸிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 50 புனித ஹஜ் யாத்ரீகர்கள் அடங்கிய, ஆண்கள் மற்றும் பெண்கள் ஏறக்குறைய 100 நபர்கள் வரை இந்த சிறப்பு வழியனுப்பு மற்றும் ஹஜ் விளக்க கூட்டத்தில் பங்கு பெற்று பயனடைந்தனர்.

முன்னதாக மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி நாஸர் சாதிக் ரப்பானி ஹஜ்ரத் டீ.யு.இ (அல் அமீன் உம்ரா சர்வீஸ்) அவர்கள் ஹஜ்ஜின் பெரும்சிறப்புகள் குறித்து சொற்பொழிவு ஆற்றினார்கள். மஜ்லிஸின் பொதுச் செயலாளர் மவ்லானா மவ்லவி காரி ஹாபிஸ் அப்ழலுல் உலமா சையத் அலி பாகவி ஹஜ்ரத் டீ.ஊழஅஇ அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறைகளின் போது ஏற்படும் தவறுகள் மற்றும் தடுக்கப்பட்ட செயல்களை விளக்கி கூறினார்கள். மஜ்லிஸின் தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் மனாஸிக்குகள் என்று சொல்லப்படும் செயல்முறைகளின் ஒவ்வொரு அம்சங்களையும் அவ்வம்சங்களில் ஹாஜிகள் பேண வேண்டிய ஒழுங்குகளை நிதானமாகவும் ஆழமானவும் புரிந்து விளங்கும்படியான விளக்க பேரூரை நிகழ்த்தினார்கள். ஹஜ் யாத்ரீகர்களிடமிருந்து வினாக்கள் பெறப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஜனாப் அல்ஹாஜ் அப்துர்ரவூப் (அல் அமீன் உம்ரா சர்வீஸ்) அவர்கள் தெளிவான பயண விபரக்குறிப்புகளை ஹாஜிகளுக்கு; கூறினார்கள். மஜ்லிஸின் இணைச்செயலாளர் மவ்லானா மவ்லவி முஹம்மது அலி ரஷாதி அவர்கள் உள்ளம் உருகிய துவாவுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்... கூட்ட முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிமையான இரவு உணவு பரிமாறப்பட்டது.


 


MISK on FACEBOOK