Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

பத்ரு சஹாபாக்கள் தின நிகழ்ச்சி
ذكـــرى غـــزوة بـــدر الكبــــرى

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் சுன்னா  குவைத் ஏற்பாடு செய்த பத்ர் சஹாபாக்கள் நினைவு தினம் கடந்த வெள்ளிக்கிழமை 27.08.2010 அன்று குவைத் டீச்சர்ஸ் சொஸைட்டி அரங்கத்தில் இரவு 9:30 மணிமுதல் நள்ளிரவு 12:30 மணிவரை நடைபெற்றது.

கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு கூட்டத்தினை, மஜ்லிஸின் பொருளாளர் ஜனாப் கபீர் அலி அவர்கள் கிராஅத் இறைவசனங்களை ஒதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மஜ்லிஸின் துணைத்தலைவர் ஜனாப் அப்துல் பாரி ஹஜ்ரத் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். மஜ்லிஸின் துணைச் செயலாளர் ஜனாப் முனீர் அஹமது அவர்கள் வரவேற்புடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மஜ்லிஸின் ஒருங்கிணைப்பாளரான மவ்லானா மவ்லவி ஹாபிஸ் காரி சையத் அலி பாகவி ஹஜ்ரத் அவர்களும், மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி அஜ்வத் ரைவின்தி அவர்களும் யவ்முல் ஃபுர்கான் என்றழைக்கப்படும் வாய்மைக்கும் பொய்மைக்கும் இடையே ஹிஜ்ரி 2 ல் (கி.பி 624 ம் ஆண்டு) நடந்த பத்ருப் போர், சஹாபாக்களின் தியாகங்கள், பத்ரின் படிப்பினைகள் போன்ற பல்வேறு கருத்துகளில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். சேலம் மழாஹிருல் உலூம் அரபிக்கல்லூரியின் பேராசிரியரும் தலைசிறந்த காரியுமான மவ்லானா மவ்லவி ஹாபிஸ் முஹம்மது அனஸ் ஆலிம் அவர்கள் சப்அ மஸானிய என்றழைக்கப்படும் திருக்குர்ஆனின் துவக்க அத்தியாயத்தை உள்ளம் உருகும் வண்ணம் பல்வேறு லயங்களிலே ஓதும் முறைகளான உச்சரிப்புக்களுடன் ஓதிக்காண்பித்தார்.

மஜ்லிஸின் வெளியீடான ரமழானும் தராவீஹ_ம் என்ற கையேட்டுப் பிரதிகள் மறுபதிப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சியினூடே மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் பிரதி லக்கி பிரஸின் உரிமையாளர் ஜனாப் சுலைமான் பாட்சா அவர்களும், இரண்டாம் பிரதியை அல்ஷாபி உணவக உரிமையாளர் டெல்லி பாஷா (அப்துல் காதிர்) அவர்களும், மூன்றாம் பிரதியை ஜனாப் முகமதுபந்தர் R. M. பாரூக் அவர்களும், நான்காம் பிரதியை தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் N.A.M. அப்துல் அலீம் அவர்களும், 5 வது பிரதியை TVS  கார்கோ சார்பாக ஜனாப் ரஷீத் கான் (அல்ஹாஜ் TVS ஹைதர் அலி அவர்களின் மருமகனார்) அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் நிறைவுப்பேருரை நிகழ்த்தினார்கள். அவர்களின் உரையிலே பிரார்த்தனை முஃமின்களுடைய ஆயுதம், பிரார்த்தனை விதிகளை மாற்றி விடுகிறது போன்ற கருத்துச்செறிவுகள் மிகுந்த பிரார்த்தனைப் பண்புகளை அழகிய முறையில் எடுத்துக் கூறினார்கள்.

பெண்களுக்கு தனிஇடவசதி செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் இச்சிறப்பு கூட்டத்திலே பங்கு பெற்று பயனடைந்தனர். அனைவருக்கும் சஹர் உணவு அல்ஷாபி உணவகம் சார்பாக வினியோகிக்கப்பட்டது.

இணைச்செயலாளர் சத்திரமனை ஹஸன் முஹம்மது அவர்கள் நன்றியுரை நவின்றதோடு மஜ்லிஸின் இணைச்செயலாளர் மவ்லானா மவ்லவி முஹம்மது அலி ரஷாதி அவர்களின் துவாவுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்…

 BADR WARRIORS DAY (BADR SAHABA DAY)

ذكـــرى غـــزوة بـــدر الكبــــرى

MISK – Majlis Ihya'u Sunna Kuwait (An unified Sunna Revival Council of Kuwait) arranged a special program for the remembrance of Badr Warriors Day (Badr Sahaba day) which was held on 27th August 2010 at Kuwait Teachers Society auditorium from 9:30 p.m till 12:30 a.m.

Moulana Moulavi T.P. Abdul Latif Kasimi (President – MISK) presided over the function. Janab Alhaj Kabeer Ali (Treasurer – MISK) recited the holy verses on beginning. Janab M. Muneer Ahmed welcomed everyone and anchored the whole program. Janab Bari Hazrath (Vice President – MISK) delivered the opening address. Moulana Moulavi Qari Syed Ali Baqavi ( Coordinator – MISK) Moulana Moulavi Mohammed Ajwad Raiwindi ( Vice President – MISK) delivered the special addresses where they pointed out the Muslims' beginning stage and the lessons out of this test. The great battle took place in between Haq(Truth)  and Bathil (Falsehood) on Friday 17th March 624 A.D (2 A.H) in a winter season at Valley of Badr. The battle of Badr was the most important among the Islamic battles of Destiny. For the first time the followers of the new faith were put into a serious test. Had victory been the lot of the pagan army while the Islamic Forces were still at the beginning of their developments, the faith of Islam could have come to an end. This battle laid the foundation of the Islamic State and made out of the Muslims a force to be reckoned with by the dwellers of the Arabic Peninsula.

During the program, a special Re-edition of (MISK) with the title of RAMADAN AND TARAWEEH were released by Moulana Moulavi T.P. Abdul Latif Kasimi (President – MISK) the first copy received by Lucky Press Janab Sulaiman Batcha, the 2nd copy by Al-Safi Restaurant Proprietor Janab Delhi Basha (Abdul Kadir), 3rd Copy by Mohamed Bander R.M. Farook, 4th Copy by TMCA President N.A.M. Abdul Aleem and 5th Copy by TVS Group Janab Rasheed Khan (Son in Law of Alhaj Hyder Ali).

Moulana Moulavi T.P. Abdul Latif Kasimi (President – MISK) delivered the closing address, while he mentioned the benefits of (Du'a) supplication that he indicated the narration of the Hadith " the Supplication is the weapon of the believers".  Sathiramanai Hasan Mohammed ( Joint Secretary – MISK) delivered the vote of thanks and program ended with the Du'a (Supplication) by Moulana Moulavi Mohammed Ali Rashadi ( Joint Secretary – MISK).

Hundreds of men and women including many prominent personalities in Kuwait were benefitted by attending this wonderful program. The Suhoor Meal packs were delivered to all the attendees by Al-Shafi Restaurant.  

   
MISK - ISRAH MEHRAJ 2010 MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010 MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010
MISK - ISRAH MEHRAJ 2010


MISK on FACEBOOK