Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் ஏற்பாடு செய்த அரஃபா தினம் மற்றும் குடும்பத்தினர்களுக்கான மாதந்திர சிறப்பு நிகழ்ச்சிகள்

MISK – Majlis Ihya'u Sunna Kuwait arranged A Special Program for the
Day of Arafa & the 2nd Monthly Program for Families

 

 

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் ஏற்பாடு செய்த அரஃபா தினம் மற்றும் குடும்பத்தினர்களுக்கான மாதந்திர சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருங்கே கடந்த வியாழக்கிழமை 11.11.2010 அன்று ஸால்மியா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் பப்ளிக் ஸ்கூல் அரங்கத்தில் மாலை 7:30 மணிமுதல் இரவு 11:00 மணிவரை நடைபெற்றது.

கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு கூட்டத்தினை, ஜனாப் அப்துர் ரஹ்மான் ஃபவ்வாஸ் கிராஅத் இறைவசனங்களை ஒதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மஜ்லிஸின் கவுரவ ஆலோசகர் ஜனாப் அப்துல் காதிர் (டெல்லி பாஷா) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் அவர்களின் உரையினுடே உண்மையான உலமாக்களின் பண்புகள் அவர்களின் உலகியல் தன்மைகள் உலகப்பற்றற்ற நிலையுடன் எளிய நிலையில் தொடர்ந்து தூய்மையான எண்ணங்களுடன் இறைபணி செய்யும் பாங்குகளை விவரித்த அதே வேளையில் உலகபற்றுடன் சிலர் செயல்பட்டு சமுதாயத்தை சீரழித்து வரும் கண்கூடான அவல நிலையினை கவலையுடன் நினைவு கூர்ந்தார் அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் பட உரத்த சிந்தனைகளை இக்கூட்டத்திலே வழங்கினார்கள். இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பான குஐஆயு ன் தலைவர் மரியாதைக்குரிய ஜனாப் சித்தீக் வலியாகத் அவர்கள் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினார்கள் அவர்கள் தங்களின் உரையினிலே மஜ்லிஸின் தலைவர் ஜனாப் அப்துல் லத்தீப் உஸ்தாத் அவர்கள் குவைத்தில் தென் இந்திய மக்களுக்கு மத்தியிலே அளப்பரிய நீண்ட நெடிய தீனுடைய சேவைகளை தன்னலமற்று செய்து வருவதையும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனக்கு அவர்களுடனான நெருக்கத்தையும் மார்க்க நற்சேவைகளின் பால் உஸ்தாத் அவர்களின் உறுதியையும் பல்வேறு கால கட்டத்தில் தமிழ் மற்றும் கேரள சமுதாயங்களுக்கிடையே ஹஜ்ரத் அவர்களால் நிகழ்ந்த பல்வேறு நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அவையினருக்கு அளித்தது பல்வேறு உண்மையான நல்ல செய்திகளை வெளிக் கொணர வைத்தது, இன்று மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (ஆஐளுமு) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே வலுவான இப்பெரிய கட்டமைப்பு உஸ்தாத் அவர்களின் தலைமையில் தூய்மையான அதே பணிகளை இம்மண்ணிலே தொடர்ந்து செய்து வருவது மிகவும் போற்றுதலுக்குரியது, உஸ்தாத் அவர்களுக்கும் அவர்களின் உன்னத தலைமையின் கீழ் சேவையாற்றும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் வல்ல இறைவன் மிகுந்த நற்கூலிகளை வழங்குவானாக என்ற பிராத்தனைகளுடன் கூடிய வாழ்த்துரைகளை ஆங்கிலத்திலே நல்கினார்கள். மஜ்லிஸின் துணைத்தலைவர் ஜனாப் பாரி ஹஜ்ரத் மற்றும் இணைச் செயலாளர் மவ்லானா மவ்லவி ஷேக் தாவூது சிராஜி அவர்களும் துவக்கவுரைகளை நிகழ்த்தினார்கள். அதே போல் தமிழ் நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவரும், தமிழ் இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜனாப் அப்துல் அலீம் அவர்களும், குவைத் காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர் ஜனாப் டாக்டர் அன்வர் பாசா அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள். மஜ்லிஸின் இணைச்செயலாளர் மவ்லானா மவ்லவி முஹம்மது அலி ரஷாதி அவர்கள் இச்சிறப்பு நிகழ்வுகளை அற்புதமாக தொகுத்து வழங்கினார்கள். மஜ்லிஸின் பொதுச் செயலாளரான மவ்லானா மவ்லவி ஹாபிஸ் காரி சையத் அலி பாகவி ஹஜ்ரத் அவர்கள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த குத்பா பேருரையும், இஸ்லாமிய பரிபூரணமும் கொண்ட கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜான 'ஹஜ்ஜத்துல் விதா 'என்ற தலைப்பிலும், மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி அஜ்வத் ரைவின்தி அவர்கள் படைத்த இறைவனுக்காக முழுமையாக அர்ப்பணிப்பு வாழ்வு மேற்கொண்ட தியாகச்செம்மல் 'சைய்யதுனா இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒப்பற்ற வாழ்க்கையும் கஅபா நிர்மாணமும் ' என்ற தலைப்பிலும், இறுதிப் பேருரையாக மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்கள் நீரைத் தேடிய ஹாஜர் என்ற தியாகத் தாயுள்ளத்திற்கு இறை வெகுமதியாக குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் பாதத்தில் உதித்த ஜீவ நீருற்றினான ' ஜம் ஜம்மின் அற்புத வரலாறு' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மஜ்லிஸின் உறுப்பினர் ஜனாப் இராவுத்தர் கனி அவர்கள் தானே இயற்றிய மஜ்லிஸின் செயல்பாடுகளை விளக்கும் 'சிறப்புப்பண்' ஒன்றை அழகிய தொனியுடன் பாடி இசைத்தார்கள்.

மஜ்லிஸின் பொருளாளர்; ஜனாப் கபீர் அலி அவர்கள் நன்றியுரை நவின்றதோடு மஜ்லிஸின் துணைத்தலைவர் மஜ்லிஸின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி அஜ்வத் ரைவின்தி அவர்களின் பணிவச்சம் மிகு துவாவுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்... பெண்களுக்கு தனிஇடவசதி செய்யப்பட்டிருந்தது. மஜ்லிஸின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்களும் பெண்களும் சுமார் 200 பேர்கள் வரை இச்சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயனடைந்தனர். கூட்ட இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

 


                                       
MISK – Majlis Ihya'u Sunna Kuwait arranged a special program for the Day of Arafa, the public discourses and the 2nd Monthly program for Families which was held on 11th November 2010 at Indian Public School auditorium in Salmia Area from 7:30 p.m till 11:30 p.m.

Moulana Moulavi T.P. Abdul Latif Kasimi (President – MISK) presided over the function. Janab Abdurrahman Fawwaz recited the holy verses on beginning, while Janab Alhaj Abdul Kadir (Delhi Basha) welcomed everyone during his welcome address. Respected Janab Siddique Valiyakath, President FIMA (Federation of Indian Muslim Associations) delivered the felicitation address. Opening Speeches given by Janab Bari Hazrath (Vice President – MISK) and Moulana Moulavi Sheikh Dawood Siraji. The President of TMCA and All Tamilnadu Associations' Coordinator  Janab N.A.M. Abdul Aleem, and Dr. Anwar Batcha, Qaid –e – Millath Forum Organizer felicitated in this splendid program. Janab Rawthar Gani sung an appraisal song with explanations of the services of the MISK.

The following Prominent Scholars of the Majlis delivered the Special Addresses:

  1. Moulana Moulavi T.P. Abdul Latif Kasimi, President – MISK,

Topic "The Zam Zam a Miraculous Elixir "

 Moulana Moulavi Mohammed Ajwad Raiwindi, Vice President – MISK,

Topic "Devoted life of Prophet Ibrahim (pubh) & Erecting of Ka'ba"

 Moulana Moulavi Qari Syed Ali Baqavi,  General Secretary – MISK,

Topic "Rituals of the Hajj pilgrimage".

About 200 men and women including many prominent personalities in Kuwait were benefitted by attending this wonderful program. The whole program anchored wonderfully by Joint Secretary Moulana Moulavi Mohammed Ali Rashadi and the program concluded with the Dua by Moulavi Ajwad Raiwindi.  The Dinner packs were delivered to all the attendees.

 

 


MISK on FACEBOOK