Registrated with Indian Embassy & Masjid Kabeer


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத்தின் (MISK)
தமிழ் வகுப்பு ஃபஹாஹுல் பகுதியில் துவக்கம்

குவைத்தில் நிரவி வாழக்கூடிய பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பத்தினர்களின் அன்புச்சிறார்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்றிட வாய்ப்பற்ற நிலை இருப்பதை கருத்தில் கொண்டு மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ன் கண்ணியத்திற்குரிய தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி அவர்களின் சீரிய முயற்சியில் செம்மொழியாம் தனிப் பெரும் தமிழ் மொழியை கற்றிட களம் அமைத்திடும் சேவையின் முதற்கட்டமாக ஹவல்லி மத்ரஸத்துல் ஃபலாஹ் வில் 27-11-2010 முதல் செயல் படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து ஃபஹாஹீல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் குடும்பத்தினர்களின் அன்புச்சிறார்களுக்காக இரண்டாம் கட்ட வகுப்புக்கள் இன்ஷா அல்லாஹ் மங்காப் பகுதியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆரம்பம் செய்யப்பட இருக்கிறது.

தமிழை தாய் மொழியாக பேசக்கூடிய புலம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் தொகுப்பாக வாழும் இந்நாட்டில் தனியார் பள்ளிகளில் ஆங்கில மொழிவழி கல்வித்திட்டத்தில் பயிலும் சிறார்கள் தமிழ் மொழி நீங்கலாக மற்ற பாடங்களை நன்றாக கற்று தேர்ந்து வரும் வேளையில், தமிழ் மொழி தெரியாத அவல நிலையை போக்கும் முகமாகவும் தாய்நாட்டிற்காற்றும் தனிப்பெறும் தொண்டாக கருதியும் இம்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மஜ்லிஸின் மொழிப்பிரிவில் முதன்மை பயிற்சி மொழியாக பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் கற்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

• அனுமதி - இலவசம்
• வகுப்பு நாட்கள் - ஒவ்வொரு சனிக்கிழமை காலை 8- முதல் 11:00 மணிவரை

எண்கள் :

ஃபஹாஹீல் கிளையின் தமிழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர்
Dr.. ஷபியுல்லாஹ்;, துணைத் தலைவர் - மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத் (MISK)

 

MISK on FACEBOOK