Registrated with Indian Embassy & Masjid Kabeer

 


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) தலைவர் மற்றும் நிர்வாகிகள்
மேதகு இந்தியத் தூதருடன் சந்திப்பு

Majlis Ihya'u Sunna Kuwait (MISK)
President and Executives met H.E. the Ambassador of India

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) இந்திய தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மரியாதை நிமித்தம் மேதகு இந்தியத் தூதருடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை 3:30 மணியளவில் இந்தியத் தூதர் மேதகு அஜய் மல்ஹோத்ரா அலுவலகத்தில் நடைபெற்றது.

கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின் தலைவர் மவ்லவி T.P. அப்துல்லத்தீப் காஸிமி தலைமையில் ஒன்பது நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய குழு மேதகு இந்தியத்தூதுவர் அஜய் மல்ஹோத்ரா அவர்களை சந்தித்து தூதரக பதிவுக்கான நன்றிகளை தெரிவித்ததோடு, மஜ்லிஸின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களை விளக்கிக் கூறினர். மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி அவர்களின் சேவைகளை நன்கு கேட்டறிந்ததுடன் அவர்களால் தொகுத்து சமீபத்தில் வெளியிடப்பட்ட அண்ணலெம் பெருமானார் அவர்களின் ஜீவிய சரித்திரமான சீரத்தே முஸ்தபா (ஸல்) நூலை தூதரக நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்த்திட அனுமதியளித்தார். ஒவ்வொருவருடைய அறிமுகங்களுக்குப் பின்னர்இ குவைத் வாழ் இந்தியர்களின் நலவாழ்வு குறித்த கருத்து பரிமாற்றத்தின் போதுஇ குவைத் அரசின் சமீபத்திய பொதுமன்னிப்பு (Amnesty)குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும்இ அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் எடுத்துவருவதை விளக்கி கூறி இவ்வித மனித நேயமிகு சாத்தியமிக்க சேவைகளில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேதகு தூதரின் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன்இ மேலை நாடுகளில் தூதரக மற்றும் ஜக்கிய நாடுகளின் சபை இராஜ்ஜீயப்பணிகளின் போது குறிப்பாக வாஷிங்டனில் தூதரக பணிகளின் போது குவைத் அமீர் மாண்புமிகு ஷேக் சபாஹ் அல் அஹ்மது அல்-சபாஹ் வுடனான தமக்கிருக்கும் பழைய நட்புக்கள்;, தன்னுடைய தூதரக நியமனத்தின் போது அரசு அணிவகுப்பு மரியாதை, குவைத் மன்னரிடம் இந்திய அரசின் கூடுதல் தூதர் மற்றும் இந்திய அரசுக்கான அனைத்து அதிகாரப்பூர்வ விரகருக்கான கிரடென்ஷியல் சமர்ப்பணம் மற்றும் அவ்வப்போது நிகழும் அமீருடனான சந்திப்பு மட்டுமல்லாது பிரதமர் மற்றும் பல்வேறு அமைச்சரவை தொடர்பான மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளின் சந்திப்பில் குவைத் இந்திய பரஸ்பர இராஜ்ஜீய உறவுகள் மென்மேலும் பலப்பட வாய்ப்பமைந்ததோடு குவைத் வாழ் இந்தியர்களின் நலவாழ்வுக்கான பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டது குறித்து வெகுவாக விளக்கினார். தன்னுடைய தூதரக நியமனமான மார்ச் 8இ 2009 லிருந்து இதுவரை இந்திய அரசின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் 3 முறை ஏற்பட்டதும் சிறப்பம்சமாக எடுத்துக்காட்டினார்.

7 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் புலன்பெயர்ந்து வாழும் இந்திய சமுதாயத்தின் பல்வேறு களங்களில் தூதரகம் ஆற்றிவரும் சேவைகளை விளக்கிக் கூறினார், குறிப்பாக வீடுகளில் பணிபுரியும் இல்லப்பணியாளிகளுக்கான அடைக்கலம் மற்றும் மனிதாபிமான மிக்க நிலையில் இந்தியப் பிரஜைகள் கண்ணியமாக நடத்தப்படும் விதம் குறித்தும் அறியப்பட்டது. இச்சந்திப்பு மாலை 5:30 மணிவரை நீடித்தது. அவரின் அற்புதமான பிரதானிய அணுகுமுறைகள் மற்றும் சேவைகளை பாராட்டி, குவைத் இந்திய தூதரகம் மற்ற தூதரகங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக புகழ்ந்த போது மஜ்லிஸின் தலைவரிடம் துவா செய்யுங்கள்!! என்று உளப்பூர்வமாக தூதரவர்கள் கூறியதோடு மஜ்லிஸின் நிர்வாகிகளையும் வாழ்த்தி தூதரக விஜயத்திற்கு நன்றி கூறி வழியனுப்பி வைத்தார்.


 

Majlis Ihya'u Sunna Kuwait (MISK) Office-bearers met His Excellency Ajai Malhotra, Ambassador of India to Kuwait on 07 March 2011 at his esteemed office. His Excellency welcomed every one, President Moulavi T.P. Abdullatif Kasimi and office bearers thanked to H.E. the Ambassador for the (MISK) Council's registration in our esteemed embassy. Mr. Muneer Ahmed introduced the office bearers and briefed the activities of MISK which was well received by His Excellency and appreciated especially in the line of education and Tamil language teaching classes.

The meeting was very fruitful with interaction on many aspects with valuable suggestion from His Excellency. H.E. the Ambassador described the amnesty situations and the embassy's necessary attempts to manage thousands of Indians with various problems to leave Kuwait or settle their position legally, as well as some other extraordinary humanitarian services for the housemaids shelter and the provisions during their stay. His Excellency shared intimately about his past experiences on many countries and his charge in Kuwait, it was realized aftermath His Excellency's well diplomatic approaches with many higher authorities in Kuwait alleviated to serve our community at most level in Kuwait. He underlined the recent development of the bilateral relationships between India and Kuwait and the best example of Foreign Minister's visits on thrice since 2009 which are highly improved comparing with past years.

President Moulavi T.P. Abdullatif Kasimi, Moulavi S.A. Nasar Rabbani, Moulavi Mohamed Ali Rashadi, Dr. Shafiullah, Advocate Ghouse Mohideen, Ali Mydeen, Abdurrazak, Moulavi Mohsin Ismail, Muneer Ahmed, were in the delegation.

 

 

 

MISK on FACEBOOK