Registrated with Indian Embassy & Masjid Kabeer

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

குவைத் இந்தியத்தூதரக வரவேற்பு நிகழ்வில்
மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன்
மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத்தின் துணைச் செயலாளர் சந்திப்பு

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ன் குவைத் இந்தியத் தூதரக அங்கீகரத்திற்குப் பிறகு மேதகு இந்தியத்தூதர் அஜய் மல்ஹோத்ரா அவர்கள் மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான வரவேற்பு விருந்தில் கலந்து கொள்வதற்காக கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள்.

மஜ்லிஸின் சார்பாக கலந்து கொண்ட துணைச் செயலாளர் மவ்லானா மவ்லவி முஹம்மது அலி ரஷாதி அவர்கள் அவ்விருந்தின் போது மாண்பு மிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா அவர்களை சந்தித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

MISK on FACEBOOK