Registrated with Indian Embassy & Masjid Kabeer

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

(MISK) மஜ்லிஸின் புதிய பொதுச் செயலாளராக
மவ்லானா மவ்லவி ஹாபிஸ் காரி அப்ழலுல் உலமா
A. சையத் அலி பாகவி B.Com. அவர்கள் தேர்வு

MISK Elects Moulana Moulavi A. Syed Ali Baqavi as its General Secretary

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ன் செயற்குழுவிற்கான முக்கிய ஆலோசனைக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 15.10.2010 அன்று மாலை குவைத் சிட்டியில் உள்ள மன்னு ஸல்வா ஹோட்டலில் நடைபெற்றது. மஜ்லிஸின் தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி தலைமையில் கூடிய இந்த முக்கிய ஆலோசனைக்கூட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் முக்கிய பொருளாக மஜ்லிஸிற்கான புதிய பொதுச் செயலாளர் தேர்வுக்கான முன்மொழிவுகள் இடம் பெற்றிருந்தது.

மறுசீரமைக்கப்பட்ட மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த மவ்லானா மவ்லவி அப்துஸ்ஸலாம் தாவூதி அவர்கள் தற்போது இந்தியாவிலேயே தங்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை குறித்து அவரிடமிருந்து வந்த முறையான தகவலின் அடிப்படையில் புதிய பொதுச்செயலாளர் தேர்வு சம்பந்தமாக உடனடியாக பரிசீலினை மேற்கொள்ளப்பட்டு இவ்வாலோசனைக்கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி அதற்கான தேர்தல் நடத்தப்பட்டது, பல்வேறு அபிப்பிராயங்களுக்குப் பிறகு கூட்டத்தினரின் ஏகோபித்த முடிவுப்படி மஜ்லிஸின் தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி அவர்கள்
மவ்லானா மவ்லவி ஹாபிஸ் காரி அப்ழலுல் உலமா A. சையத் அலி பாகவி B.Com.

அவர்களை மஜ்லிஸின் புதிய பொதுச் செயலாளராக நியமித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். வல்ல ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களுக்கு அமானிதமாகவும், கண்ணியமாகவும் அளிக்கப்பட்ட சமுதாயத்தின் இப்பெரும் பொறுப்பை சிறப்புடன் செயல்படுத்திட எல்லா வலிமைகளையும், தவ்ஃபீக்குகளையும் நல்கிடுவானாக! ஆமீன்!! என்று கூட்டத்தினர்கள் வாழ்த்தி துவா செய்ததோடு மஜ்லிஸின் சீரிய வளர்ச்சிக்கும் சமுதாய நலனுக்கும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்கள். வருகிற மஜ்லிஸின் பொதுக்குழு கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் இந்நியமனத்திற்கான முறைப்படியான ஒப்புதல் பெறப்படும்.

(புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹஜ்ரத் அவர்கள் குவைத்தில் பிரபல TVS கார்கோ நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்கள். வேலுரிலுள்ள புகழ்பெற்ற அரபிக்கல்லூரியான பாகியாத்துஸ்ஸாலிஹாத்தில் 1985 ம் ஆண்டு மவ்லவி ஆலிமிற்க்கான பாகவி பட்டமும், 1992 ல் சேலம் மழாஹிருல் உலூமில் ஹிப்ழ் மற்றும் காரிக்கான ஸனதும் பெற்றவர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்ழலுல் உலமா மற்றும் B.Com பட்டமும் பெற்றவரார்.)

An Important CC Meeting of MISK was held on 15.10.2010 at Mann-o-Salwa Hotel in Kuwait City. Meeting started after Isha Prayer with number of Agendas including the important proposal for the election of New General Secretary for MISK. Moulana Moulavi T.P. Abdul Latif Kasimi (President – MISK) presided over the meeting.

Moulana Moulavi A. Abdul Salam Dawoodi had been appointed as the General Secretary for the Unified council of MISK (Majlis Ihya'u Sunna Kuwait). Recently the Council received and confirmed the official information from General Secretary about his permanent stay in India. So based on his information (resignation) the Council decided to elect a new General Secretary.

The said election proposal declared and the election had been conducted democratically on the same meeting, the president gave the floor for the open proposals to select the suitable candidate, after the many suggestions, He announced that Moulana Moulavi A. Syed Ali Baqavi has been elected by the unanimous support of the participants. Alhamdulillah!! All the participants wished and prayed for him… "May Allah the Almighty give him all power to lead this important and trusted position in a successful manner." The CC Members promised him that they will cooperate and assist in each endeavor which he will take for the development of MISK and the community welfare. Insha Allah this appointment will be obtained the approval by the forthcoming general assembly of the MISK. 

The New Elected General Secretary Moulana Moulavi, Hafiz, Qari, Afzalul Ulama A. Syed Ali Baqavi is belongs to Coimbatore. He is BAQAVI Sanad holder for Moulavi Alim in the reputed Arabic Institution of Bakiyath-us-Salihath, Vellore, Hifiz and Qari in Mazahirul Uloom, Salem. He is a B.com Graduate and Afzalul Ulema in University of Madras. Recently he is working welknown TVS Cargo Service company in Kuwait as an Accounts Manager.  

MISK on FACEBOOK